புதுச்சேரிக்கான முதல் அஞ்சல் அலுவலக கடவுச்சீட்டு சேவா கேந்திரா மையத்தை (Post Office Passport Seva Kendra -POPSK) காரைக்காலில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தொடங்கி வைத்துள்ளார்..
பெருமளவில் கடவுச்சீட்டு தொடர்புடைய சேவைகளை வழங்குவதற்காக மத்திய வெளியுறவு விவகாரத்துறை அமைச்சகமானது அஞ்சல் துறையோடு இணைந்து நாடு முழுவதும் உள்ள தலைமை அஞ்சல் நிலையங்களில் அஞ்சல் அலுவலக கடவுச்சீட்டு சேவா கேந்திரா மையத்தை அமைத்து வருகின்றது.
2017 ஜனவரியில் இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் இத்தகு மையங்களுள் காரைக்காலில் அமைக்கப்பட்டுள்ள இது 60 வது POPSK மையமாகும்.
இது யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரியில் செயல்பாட்டிற்கு வந்துள்ள முதல் POPSK மையமாகும்.