TNPSC Thervupettagam

கடைகள், நிறுவனங்களில் தண்ணீர், முதலுதவி வசதிகளை வழங்குவதற்கான மசோதா

April 17 , 2023 590 days 231 0
  • தமிழக மாநில அரசின் இந்தப் புதிய மசோதாவின் நோக்கமானது கடைகள் மற்றும் நிறுவனங்களில் குடிநீர், ஓய்வு அறை மற்றும் முதலுதவி வசதிகளை வழங்குவது என்பதாகும்.
  • இந்த மசோதாவானது தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1947 என்ற சட்டத்தினைத் திருத்துகிறது.
  • கடையில் அல்லது நிறுவனத்தில் உள்ள ஊழியர்களுக்குச் சுகாதாரமானக் குடிநீரை வழங்குவதற்கான  ஒரு பயனுள்ள ஏற்பாட்டைச் செய்ய வேண்டும்.
  • கடைகள் வேலை நேரம் முழுவதிலும் பணியாளர்களுக்கு அணுகக் கூடிய வகையில் கழிவறை வசதிகளை வழங்க வேண்டும்.
  • இதன்படி ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியான கழிப்பறைகளை அமைக்க வேண்டும்.
  • இவை ஊழியர்களுக்குப் போதுமான மற்றும் பொருத்தமான ஓய்வு அறை மற்றும் குடிநீர் வசதியுடன் கூடிய மதிய உணவு உண்ணும் அறை ஆகியவற்றை வழங்க வேண்டும்.
  • இதில் ஒவ்வொரு முதலாளியும் பரிந்துரைக்கப்படும் முதலுதவி வசதிகளை வழங்க வேண்டும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்