TNPSC Thervupettagam

கட்சத்தீவுத் திருவிழா

March 19 , 2019 1984 days 555 0
  • இரண்டு அல்லது மூன்று நாட்கள் நடைபெறும் அந்தோணி தேவாலயத் திருவிழாவானது 2019 ஆம் ஆண்டு மார்ச் 15 அன்று தொடங்கியது.
  • சமீப காலங்களில் முதன்முறையாக, இத்திருவிழாவிற்காக “வல்லம்” என்ற நாட்டுப் படகுகளில் பயணிப்பதற்கு உள்ளூரின் மரபார்ந்த மற்றும் நாட்டுப் படகு மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுபற்றி
  • அந்தோணி தேவாலயம் என்பது இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளின் கடல் எல்லையில் அமைந்த வழிபாட்டிற்கான ஒரு தனித்துவ இடமாகும். மேலும் இது இலங்கையால் புனிதத் தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • கட்சத்தீவிற்கு பயணிப்பதற்கு எந்தவொரு நபரும் இந்தியக் கடவுச் சீட்டு அல்லது இலங்கை நுழைவு இசைவு வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
  • அந்தோணி கத்தோலிக்க தேவாலயமானது 100 ஆண்டு பழமையான மரபினைக் கொண்டுள்ளது.
  • இது 1905 ஆம் ஆண்டில் மீனவர்களின் பாதுகாவலராக அறியப்படும் பதுவா அந்தோணிக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
  • இது இந்திய கத்தோலிக்கரான (தமிழர்) சீனிவாச படையாச்சியால் கட்டமைக்கப்பட்டது.
  • கட்சத்தீவு என்பது இலங்கையின் கடற்பகுதியில் அமைந்துள்ள 285 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட (1.15 கிலோமீட்டர்) ஒரு சர்ச்சைக்குரிய குடியேற்றமில்லாத தீவாகும்.
  • இந்தத் தீவானது 1974 ஆம் ஆண்டில் அப்போதைய இந்தியப் பிரதமரான இந்திரா காந்தியால் இலங்கைக்கு வழங்கப்படும் வரை இது இந்தியாவின் வசம் இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்