TNPSC Thervupettagam

கட்டாயத் தொழிலாளர் இலாபம் பற்றிய ILO அறிக்கை

March 23 , 2024 118 days 182 0
  • சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் (ILO) ஆய்வின்படி, கட்டாய தொழிலாளர் முறை ஆண்டிற்கு சுமார் 36 பில்லியன் டாலர் மதிப்புள்ள சட்டவிரோதமான இலாபத்தினை ஈட்டுகிறது.
  • 2014 ஆம் ஆண்டு முதல் இது போன்ற சட்டவிரோத இலாபங்கள் 37% அதிகரித்துள்ளது.
  • 'இலாபம் மற்றும் வறுமை: கட்டாயத் தொழிலாளர் முறையின் பொருளாதாரம்' என்ற தலைப்பிலான அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது.
  • ஒரு தசாப்தத்திற்கு முன்பு 8,269 டாலர் (பணவீக்க மதிப்பிற்கு ஏற்ப நிகர் செய்யப்பட்டது) இலாபம் ஈட்டிய கடத்தல்காரர்கள் மற்றும் குற்றவாளிகள் தற்போது 10,000 டாலர் வரை இலாபம் ஈட்டுகிறார்கள் என்றும் இந்த அறிக்கை மதிப்பிடுகிறது.
  • கட்டாயத் தொழிலாளர் முறையின் மூலம் ஈட்டப்படும் மொத்த வருடாந்திர சட்ட விரோத இலாபம் ஆனது ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவில் (84 பில்லியன் டாலர்) அதிகமாக உள்ளது.
  • அதைத் தொடர்ந்து ஆசியா மற்றும் பசிபிக் (62 பில்லியன் டாலர்), அமெரிக்கா (52 பில்லியன் டாலர்), ஆப்பிரிக்கா (20 பில்லியன் டாலர்), மற்றும் அரபு நாடுகள் (18 பில்லியன் டாலர்) ஆகியப் பகுதிகளில் அதிக இலாபங்கள் பதிவாகியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்