கட்டாய இடப்பெயர்வு பற்றிய ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்ட அமைப்பின் அறிக்கை
December 15 , 2022 854 days 477 0
ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்ட அமைப்பானது, "உள்நாட்டு இடப்பெயர்வுகளின் போக்கினை மாற்றியமைத்தல்: தீர்வுகளைக் கண்டறிவதற்கான மேம்பாட்டு அணுகு முறை" என்ற அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
முதன்முறையாக 2022 ஆம் ஆண்டில் 100 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வலுக்கட்டாயமாக இடம் பெயர்த்தப்பட்டுள்ள நிலையில், அவர்களில் பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த நாடுகளுக்குள்ளேயே இடம் பெயர்த்தப் பட்டுள்ளனர்.
2021 ஆம் ஆண்டின் இறுதியில், மோதல்கள், வன்முறைகள், பேரழிவுகள் மற்றும் பருவ நிலை மாற்றம் காரணமாக 59 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் சொந்த நாடுகளுக்குள் வலுக்கட்டாயமாக இடம் பெயர்த்தப் பட்டுள்ளனர்.
உக்ரைனில் ஏற்பட்ட போருக்கு முன்பு, அங்கு 6.5 மில்லியன் மக்கள் உள் நாட்டிற்குள்ளேயே இடம் பெயர்ந்துள்ளதாக மதிப்பிடப் பட்டுள்ளது.
2050 ஆம் ஆண்டில், பருவநிலை மாற்றம் ஆனது 216 மில்லியனுக்கும் அதிகமான மக்களை தங்கள் சொந்த நாடுகளுக்குள் இடம் பெயர்வதற்கான கட்டாயத்தினை ஏற்படுத்தும்.
2021 ஆம் ஆண்டில் 130க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் புதிய இடப் பெயர்வுகள் பதிவு செய்யப் பட்டுள்ளதால், பேரழிவு தொடர்பாக மேற்கொள்ளப்படும் உள்நாட்டு இடப்பெயர்வு மேலும் பரவலாக காணப்படுகிறது.
சுமார் 30% தொழில்முறை வல்லுனர்கள் வேலையற்ற நிலைக்கும் மற்றும் 24% பேர் முன்பு போல வருமானம் ஈட்ட முடியாத நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.
உள்நாட்டிற்குள்ளேயே இடம் பெயர்ந்த குடும்பங்களில் 48% பேர் இடப்பெயர்விற்கு முன்பிருந்ததை விட குறைவான வருமானத்தினையே ஈட்டியுள்ளனர்.