பஞ்சாபில் காவல்துறை அதிகாரிகள் உள்பட அனைத்து அரசு ஊழியர்களுக்கும் கட்டாய போதை மருந்து பரிசோதனைக்கு அம்மாநில முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.
அரசாங்கப் பணியில் அனைத்து விதமான பணிநியமனம் மற்றும் பதவி உயர்வு ஆகியவற்றிற்கு போதை மருந்து பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என்று பஞ்சாப் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதே போல் குறிப்பிட்ட பணியாளர்கள் பணியின் தன்மையைப் பொறுத்து ஆண்டுதோறும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.