TNPSC Thervupettagam

கட்டுப்படுத்தப்பட்ட சூழலிலான மனிதத் தொற்று ஆய்வுகள்

July 28 , 2023 361 days 188 0
  • இந்திய மருத்துவ ஆராய்ச்சிச் சபையானது (ICMR), நன்கு கட்டுப்படுத்தப்பட்ட ஒரு சூழ்நிலையிலான மனிதத் தொற்று ஆய்வுகளை (CHIS) அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்தப் புதுமைமிக்க ஒரு ஆராய்ச்சி மாதிரியானது உடல் ஆரோக்கியமான பல்வேறு தன்னார்வலர்களைக் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் நோய்க்கிருமிகளின் தாக்கத்திற்கு உட்படுத்துகிறது.
  • CHIS என்பது கட்டுப்படுத்தப்பட்ட மனிதத் தொற்று மாதிரி ஆய்வுகள் (CHIMs) என்றும் அழைக்கப் படுகிறது.
  • கட்டுப்படுத்தப்பட்ட முறையில் குறிப்பிட்ட நோய்க் கிருமிகளால் ஆரோக்கியமானத் தன்னார்வலர்களை வேண்டுமென்றே மிகவும் வெகுவாக பாதிப்படையச் செய்து, அந்த நோய்ப் பாதிப்பின் அதிகரிப்பு மற்றும் கடத்தி-நோய்க் கிருமி இடையேயான தொடர்புகள் மற்றும் புதியத் தடுப்பு மருந்துகளின் செயல்திறனை நன்கு மதிப்பிடச் செய்தல் ஆகிய பலவற்றினை இது உள்ளடக்கியது.
  • மரபு வழியிலான மிகப் பெரிய அளவில் மாதிரிகளைச் சேகரித்து மேற்கொள்ளப்படும் சில மருத்துவப் பரிசோதனைகளுடன் ஒப்பிடும் போது இந்த ஒரு முறையானது, விரைவான மற்றும் மிகவும் செலவு குறைந்த விளைவுகளை வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்