இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள், ALMA என்ற தொலைநோக்கித் தொகுதியைப் பயன் படுத்தி கருப்பு அண்டம் அல்லது கட்புலனாகா என்ற அண்டத்தினைக் கண்டுபிடித்து உள்ளனர்.
தூசிக்கள் மற்றும் வாயுக்களால் நிரம்பியுள்ள இந்த இளம் மற்றும் நட்சத்திரத்தை உருவாக்கும் அண்டமானது, பெரு வெடிப்பு ஏற்பட்ட 2 பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு உருவானது.
இந்த அண்டத்தினால் வெளியிடப்படும் ஒளியினைப் பூமியிலிருந்துப் பார்க்க முடியாது என்பதால் இது கட்புலனாகா அண்டம் என்று அழைக்கப்படுகிறது.
இருப்பினும், இந்த அண்டம் இருப்பது குறித்து ஈர்ப்பு வில்லை என்ற ஒரு நுட்பத்தைப் பயன்படுத்திக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
ALMA என்பது அட்டகாமா மாபெரும் மில்லிமீட்டர் அரே என்பதன் சுருக்கமாகும்.