தேசிய தகவலியல் மையமானது ஒடிஸா மாநிலத்தில் புவனேஷ்வரில் கணிமை பொருத்தப்பட்ட தேசிய தரவு மையத்தை நிறுவியுள்ளது.
டெல்லி, ஹைதராபாத், புனே ஆகியவற்றில் உள்ள தரவு மையத்திற்குப் பிறகு இது நாட்டில் நிறுவப்பட்டுள்ள NICன் (National informatics Centre - NIC) நான்காவது மையமாகும்.
தகவலியல் சேவை மற்றும் தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தொழிற்நுட்ப பயன்பாடுகளில் அரசினுடைய முதன்மை அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப அமைப்பே ராஷ்டிரிய சுக்னா விக்யான் கேந்திரா எனும் NIC ஆகும்.
இது 1976ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இது மத்திய மின்னணு மற்றும் தடவியல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் கீழ் வரும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையின் ஓர் பகுதியாகும்.