கர்நாடக மாநிலம் சாம்ராஜநகரில் அமைந்துள்ள மலே மகாதேஷ்வரா மலையில் புதிய வகை மரப் பல்லி இனமானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய இனத்திற்கு ஆராய்ச்சியாளர்கள், 'நிமாஸ்பிஸ் கணேஷையாஹி' அல்லது கணேசய்யாஸ் குள்ள மரப் பல்லி என்று பெயரிட்டனர்.
K.N. கணேசய்யா என்பவர் பெங்களூரு வேளாண் அறிவியல் பல்கலைக் கழகத்தின் வேளாண் அறிவியலாளர்கள் மற்றும் புகழ்பெற்ற கன்னட எழுத்தாளர் ஆவார்.
முன்னதாக, வடக்கு அந்தமானின் சாடில் சிகரம் தேசியப் பூங்காவில் உள்ள ஒரு புல் இனம் (சென்டோதெகா கணேஷையாஹியானா), ஒரு சிறிய கிரிப்டிக் வகை எறும்பு இனம் (பாராசிசியா கணேஷையாஹி) மற்றும் ஒரு சைகாஸ் (மடுப் பனை) இனம் (சைகாஸ் உமா-கணேஷையாஹி) ஆகியவற்றிற்கு அவரது பெயரானது இடப்பட்டது.