TNPSC Thervupettagam

கண்டசாலாவில் புத்தர் சிலை

August 22 , 2017 2689 days 1078 0
  • ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள கண்டசாலா கிராமத்தைப் பிரத்யேகப் புத்த சமய சுற்றுலாத் தளமாக உருவாக்குவதற்கான பரிந்துரைக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்த சுற்றுலாத் தளம் புத்தரின் மகாபரிநிர்வாணத்தைக் கருப்பொருளாகக் கொண்டு உருவாக்கப்படவுள்ளது. புத்தர் மகாபரிநிர்வாணத் தோற்றப்பாங்கில் இருப்பது போல் எழுபது அடி நீள சிலை அமைக்கப்படவுள்ளது.
  • புத்த சமயத்தில் நிர்வாணம் என்பது ஆசையையும், அகந்தையையும் வெற்றி கொண்டு, என்றும் நிலைத்திருக்கக்கூடிய அமைதியையும் மகிழ்ச்சியையும் அடைவது ஆகும்.
  • கடற்கரையோரம் அமைந்திருக்கும் கண்டசாலா கிராமமானது முற்கால வரலாற்றில் காடகசீலம் என்று அழைக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்