கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணை 'RudraM-II'
June 3 , 2024
174 days
246
- இந்தியா Su-30MKI என்ற போர் விமானத்தில் இருந்து வான்வழி-நிலப்பரப்பு கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது.
- RudraM-II கதிர்வீச்சு எதிர்ப்பு மீயொலி ஏவுகணை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பினால் உருவாக்கப்பட்டது.
- RudraM-II எதிரி நாட்டின் பல வகையான தாக்குதல் அமைப்புகளை எதிர்கொள்கின்ற மிகச்சிறந்த ஏவுகணையாகும்.
- இந்த ஏவுகணையானது, 300 கி.மீ. தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டது மற்றும் திட உந்துவிசை ஏவு கல இயக்கி மூலம் இயக்கப்படுகிறது.
- இந்தியாவானது தற்போது ரஷ்யாவின் Kh-31 என்ற கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணையை இயக்குகிறது.
- RudraM-II ஏவுகணைகள் Kh-31s ஏவுகணைகளுக்கான மாற்றாக அமையும்.
Post Views:
246