கத்தார் மீதான அரபு புறக்கணிப்பு நீக்கப் பட்டதனைத் தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கத்தார் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் தங்களது அரசு முறை உறவுகளை மீண்டும் தொடங்குகின்றன.
2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் கத்தார் மீதான மூன்றரை ஆண்டுத் தடையை முடிவுக்குக் கொண்டு வந்தன.
ஆனால் பஹ்ரைனைத் தவிர மற்ற அனைத்து நாடுகளும், ஏற்கனவே 2021 ஆம் ஆண்டில் அந்நாட்டுடன் பயண மற்றும் வர்த்தக இணைப்புகளை மீண்டும் தொடங்கி விட்டன.