கந்தமர்தன் மலைத்தொடர் பல்லுயிர்ப் பாரம்பரியத் தளம்
April 4 , 2023 473 days 258 0
ஒடிசா அரசானது, பர்கர் மற்றும் பலங்கிர் மாவட்டத்தில் உள்ள கந்தமர்தன் மலைத் தொடரைப் பல்லுயிர்ப் பாரம்பரியத் தளமாக (BHS) அறிவித்துள்ளது.
கந்தமால் மாவட்டத்தில் உள்ள மண்டசுரு பள்ளத்தாக்கு மற்றும் கஜபதி மாவட்டத்தில் உள்ள மகேந்திரகிரி மலைத்தொடருக்கு அடுத்ததாக இது ஒடிசாவின் மூன்றாவது பல்லுயிர்ப் பாரம்பரியத் தளம் ஆகும்.
ஃபிகஸ் கான்கினா வார் டாசிகார்பா எனப்படும் ஒரு விதையுறைத் தாவரம் மற்றும் பியூசெட்டியா ஹரிசங்கரென்சிஸ் என்ற ஒரு சிலந்தி இனம் ஆகியவை இந்தப் பகுதி மலையில் மட்டுமே காணப் படுகின்றன.
இந்த மலையின் வடக்குச் சரிவில் அமைந்துள்ள நருசிங்கநாத் கோயில் மற்றும் மலை அடிவாரத்தின் தெற்குச் சரிவில் அமைந்துள்ள ஹரிசங்கர் கோயில் போன்ற இரண்டு வரலாற்று நினைவுச் சின்னங்கள் இங்கு அமைந்துள்ளன.