இந்தியக் கடற்படையானது மே மாத தொடக்கத்தில் ஸ்கார்பியன் வகுப்பின் 2-வது நீர்மூழ்கி கப்பலான கந்தேரியை இணைக்க உள்ளது.
இது 2017 ஆம் ஆண்டு ஜனவரியில் தொடங்கப்பட்டு பல்வேறு கட்ட சோதனைகளில் ஈடுபடுத்தப்பட்டது.
கந்தேரியானது கல்வாரி வகுப்பைச் சேர்ந்த தாக்குதல் மற்றும் நீர்மூழ்கி கப்பலாகும்.
டீசல்-மின்னாற்றலால் இயங்கும் இந்த நீர்மூழ்கிக் கப்பலானது பிரெஞ்சு கடற்பாதுகாப்புப் படை மற்றும் ஆற்றல் நிறுவனமான DCNSஆல் வடிவமைக்கப்பட்டு மாசகான் கப்பல் கட்டும் நிறுவனத்தால் மும்பையில் தயாரிக்கப்பட்டது.