TNPSC Thervupettagam

கனரக உலோகங்களை தரமான முறையில் அகற்றுதல்

March 23 , 2021 1253 days 546 0
  • மாண்டி இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (IIT) பயோபாலிமரை அடிப்படையாகக் கொண்ட ஒரு பொருளைப் பயன்படுத்தி மீண்டும் உபயோகிக்கக் கூடிய ஒரு இழைம சவ்வு வடிகட்டியினை உருவாக்கியுள்ளது.
  • இது தண்ணீருந்து கனரக உலோகங்களைப் பிரித்தெடுக்க உதவுகிறது.
  • இந்த சவ்வுகள் சைட்டோசான் எனப்படும் பயோபாலிமரை அதிகளவில் கொண்ட பரப்பு இழுபொருள்களை (உலோகங்களை ஈர்த்துத் தக்க வைத்துக் கொள்ளும் பொருட்கள்) கொண்டுள்ளது.
  • சைட்டோசான்கள் ஒரு செயற்கை பாலிமரான நைலானுடன் கலக்கப்பட்ட நண்டுகளின் ஓடுகளிலிருந்து உருவாக்கப் பட்டுள்ளன.
  • பொதுவாக, வழக்கமான வடிகட்டும் அமைப்புக்கான கலன்களை அமைக்கப் பயன்படும் இழைகள், அதிவேக வாயுக்களைப் பயன்படுத்தி உருகச் செய்தல் (Melt blowing)என்ற  முறையில் உருவாக்கப் படுகின்றன.
  • ஆனால் மாண்டி IIT கல்வி நிறுவனமானது “Solution blowing” எனும் முறையினைப் பயன்படுத்தியுள்ளது.
  • இம்முறையில் மேற்பரப்பினைப் பெருமளவில் அதிகப்படுத்தும் நானோ மீட்டர் அளவே விட்டமுடைய இழைகள் உருவாக்கப் படுகின்றன.
  • அவை அதன் மேற்பரப்பினை அதிகரிக்கச் செய்து கனரக உலோகங்களை தரமான முறையில் பிரித்தெடுக்க உதவுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்