TNPSC Thervupettagam

கனிம ஆய்வுகளை மேம்படுத்துவதற்கான திருத்தங்கள்

July 21 , 2023 368 days 181 0
  • 1957 ஆம் ஆண்டு சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாட்டு மற்றும் ஒழுங்கு முறை) சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை இந்திய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
  • முக்கியமாக லித்தியம், தங்கம், வெள்ளி, தாமிரம் மற்றும் துத்தநாகம் போன்ற கனிமங்களின் ஆய்வில் கவனம் செலுத்துவதோடு, நாட்டில் கனிம ஆய்வு மற்றும் மேம்பாட்டினை ஊக்குவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் திருத்தங்கள், 2014 ஆம் ஆண்டிலிருந்து இந்தச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஐந்தாவது திருத்தத்தினைக் குறிக்கின்றன.
  • இந்தத் திருத்தம் ஆனது கனிம வளங்களை வெளிக் கொணர்வதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டினைப் பறைசாற்றுகிறது.
  • அவையாவன
    • லித்தியம் மற்றும் ஆழ்பகுதியில் காணப்படும் தாதுக்கள் குறித்த ஆய்வுகளை அதிகப் படுத்துதல்
    • ஏலத்தின் மூலம் ஆய்வு உரிமம் வழங்குதல்
    • புதிய அட்டவணையில் குறிப்பிடப்பட்ட கனிமங்களைச் சேர்த்தல்
    • தனியார் துறை பங்கேற்பினை ஊக்குவித்தல்
    • உலக நாடுகளின் முதலீட்டினை ஈர்த்தல்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்