TNPSC Thervupettagam

கனிம (ஏலம்) திருத்த விதிகள், 2024

February 3 , 2024 300 days 215 0
  • மத்திய அரசானது,சமீபத்தில் கனிம ஏல விதிகளில் மாற்றங்களை அறிவித்துள்ளது.
  • இது முன்பணத்திற்கான வரம்பினை 500 கோடி ரூபாயாக நிர்ணயிப்பதோடு, துணை நிறுவனங்கள் ஒரே கனிமத் தொகுதியினை ஏலம் கோருவதில் இருந்து தடுக்கிறது.
  • ஒரு ஏலதாரர் ஒரு கனிமத் தொகுதியின் ஏலத்தில் ஒரு ஏலத்திற்கான கோரிக்கையை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.
  • ஏலதாரரின் எந்தவொரு துணை நிறுவனமும் அதே ஏலத்தில் மற்றொன்றைச் சமர்ப்பிக்கக் கூடாது.
  • ஒரு துணை நிறுவனம் என்பது ஏலத்தில் மற்றொரு ஏலதாரரின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு நபர் (அல்லது நிறுவனம்) என வரையறுக்கப்படுகிறது.
  • இந்த விதிகள் மாநில அரசாங்கங்கள் கனிம ஆய்வு உரிமங்களை (EL) வழங்குவதற்கும் வழி செய்கிறது.
  • கனிம ஆய்வு உரிமங்களை மாநிலம் மற்றும் மத்திய அரசும் ஏலம் எடுக்கலாம்.
  • 500 சதுர கிலோமீட்டருக்கு மேலான (ச.கி.மீ), ஆனால் 1000 சதுர கிலோ மீட்டருக்கு குறைவான அல்லது அதற்கு சமமானத் தொகுதிகளுக்கான கனிம ஆய்வு உரிமத்திற்கான செயல்பாட்டு பிணைத் தொகை 2 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்