TNPSC Thervupettagam

கனிம வளங்கள் நிறைந்த நிலங்களுக்கு வரி விதிக்கும் உரிமை

July 30 , 2024 119 days 187 0
  • 1957 ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டச் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தில் சுரங்க நிலங்கள் மற்றும் கற் குவாரிகளுக்கு வரி விதிக்க மாநிலச் சட்டமன்றங்களின் அதிகாரம் கட்டுப்படுத்தப் பட வில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
  • இது மத்திய அரசின் கட்டுப்பாடுகளில் இருந்து மாநில அரசுகளை விடுவித்து, கூட்டாட்சிக் கொள்கைகளுடன் ஒத்துப் போகிறது.
  • அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின் மாநிலப் பட்டியலில் உள்ளீடு 49 (நிலங்கள் மற்றும் கட்டிடங்கள் மீதான வரி) மற்றும் 246வது சரத்து ஆகியவற்றின் கீழ் சுரங்கங்கள் மற்றும் குவாரிகளுக்கு வரி விதிக்க மாநிலச் சட்டமன்றங்கள் அந்த அதிகாரத்தைப் பெறுகின்றன.
  • கனிம வளம் கொண்ட நிலங்கள் 49வது உள்ளீடில் உள்ள 'நிலங்கள்' என்ற ஒரு விளக்கத்திற்குள் அடங்கும்.
  • ஆனால் மாநிலப் பட்டியலில் உள்ள உள்ளீடு 50 ஆனது, கனிம மேம்பாடு தொடர்பான சட்டங்கள் மூலம் கனிம உரிமைகள் மீதான வரிகளுக்கு "ஏதேனும் வரம்புகளை" விதிக்கப் பாராளுமன்றத்திற்கு அனுமதியளித்துள்ளது என்று மத்திய அரசு வாதிட்டது.
  • சுரங்கங்களை அரசுக்கு குத்தகைக்கு விடுபவர்கள் செலுத்தும் ராயல்டி ஆனது (தனிச் சிறப்புரிமை கட்டணம்) ஒரு வரி அல்ல என்று உச்ச நீமன்றத்தின் தீர்ப்பானது மேலும் தெளிவு படுத்தியுள்ளது.
  • இந்த வழக்கு 1989 ஆம் ஆண்டின் தமிழ்நாடு எதிர் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட ஒரு வழக்கின் மூலத்தில் இருந்து தோன்றியதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்