TNPSC Thervupettagam

கன்யாஸ்ரீ பல்கலைக் கழகம் @ மேற்கு வங்கம்

October 12 , 2019 1746 days 661 0
  • கன்யாஸ்ரீ திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் கன்யாஸ்ரீ பல்கலைக் கழகம் மற்றும் கன்யாஸ்ரீ கல்லூரிகளை அமைக்க மேற்கு வங்க அரசு முயற்சி எடுத்துள்ளது.
  • அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த ஜனவரி மாதத்தில் நாடியா மாவட்டத்தில் கிருஷ்ணா நகரில் ஒரு புதிய பல்கலைக் கழகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
  • கன்யாஸ்ரீ பல்கலைக் கழகமானது பெண்களுக்கு மட்டுமே உரிய ஒரு பல்கலைக் கழகமாக இருக்கும்.
  • பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பெண்கள் படிப்பதை உறுதி செய்வதும் 18 வயது வரை தங்களின் (பெண்களின்) திருமணங்களைத் தாமதப் படுத்துவதும் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
இதுபற்றி
  • மேற்கு வங்க மாநில அரசு 2013 ஆம் ஆண்டில் கன்யாஸ்ரீ திட்டத்தை ஆரம்பித்தது.
  • இந்தத் திட்டம் 2017 ஆம் ஆண்டில் பொதுச் சேவைக்காக ஐ.நா விருதை வென்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்