உலக சுகாதார அமைப்பு (WHO) ஆனது, மலேரியா பாதிப்பற்ற நாடாக கபோ வெர்டே (கேப் வெர்டே) நாட்டிற்கு சான்றளித்துள்ளது.
எனவே, உலக சுகாதார அமைப்பின் ஆப்பிரிக்க பிராந்தியத்தில் இந்த அந்தஸ்தைப் பெறும் மூன்றாவது நாடாக இது மாறியுள்ளது.
1973 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் முறையே இந்தச் சான்றிதழ் பெற்ற மொரிஷியஸ் மற்றும் அல்ஜீரியா ஆகிய நாடுகளின் பட்டியலில் இந்த நாடு தற்போது இணைந்து உள்ளது.
2021 ஆம் ஆண்டில் உலகளாவிய மலேரியா பாதிப்புகளில் சுமார் 95 சதவீதப் பங்கு மற்றும் மலேரியா தொடர்புடைய உயிரிழப்புகளில் 96 சதவீதப் பங்குடன் ஆப்பிரிக்காவில் அதிக மலேரியா பாதிப்பு உள்ளது.
உலக சுகாதார அமைப்பு ஆனது, இதுவரை 43 நாடுகள் மற்றும் 1 பிரதேசத்திற்கு ‘மலேரியா பாதிப்பற்ற நாடு’ என்ற சான்றிதழை வழங்கியுள்ளது.