கப்பல்களின் கடன் ஈடு விற்பனை தொடர்பான பெய்ஜிங் உடன்படிக்கை
October 17 , 2023 406 days 226 0
சீனா, சவுதி அரேபியா, சிங்கப்பூர் மற்றும் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 15 நாடுகள், ஐக்கிய நாடுகள் சபையின் கப்பல்களின் கடன் ஈடு விற்பனை தொடர்பான சர்வதேச தாக்கங்கள் பற்றிய உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளன.
இது கப்பல்களின் கடன் ஈடு விற்பனையின் சர்வதேச தாக்கங்களுக்கான ஒரு சீரான அமைப்பினை உருவாக்கச் செய்வதன் மூலம் சர்வதேச அளவில் சட்ட உறுதி மற்றும் முன்கணிப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தற்போது கப்பல்களின் கடன் ஈடு விற்பனை தொடர்பான பெய்ஜிங் உடன்படிக்கை என்று அறியப்படும் இந்த உடன்படிக்கையானதுஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச வர்த்தகச் சட்ட ஆணையத்தினால் (UNCITRAL) உருவாக்கப்பட்டது.
இது உறுதியளிக்கப்பட்ட புதிய உரிமையாளர்கள் மற்றும் கப்பல்களை வாங்கச் செய்வதற்கு நிதியுதவி வழங்குபவர்களின் பிரச்சினையை நிவர்த்தி செய்கிறது.
உதாரணமாக, இது கடனுக்கான உத்திரவாதம் ஆக ஒரு கப்பலுக்கு உரிமை கோரும் முந்தைய கடனாளிகளுடனான ஒப்பந்தங்களை கையாள்கின்றது.
சர்வதேசக் கடல்சார் அமைப்பானது (IMO) இந்த அறிவிப்புகள் மற்றும் கப்பல்களின் கடன் ஈடு விற்பனைச் சான்றிதழ்களுக்கான களஞ்சியமாக செயல்படுகிறது.