பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது, உள்நாட்டில் உருவாக்கப் பட்ட கப்பல் எதிர்ப்பு ஏவுகணையின் முதல் சோதனையை வெற்றிகரமாக மேற் கொண்டது.
இந்த ஏவுகணை ஒடிசாவில் உள்ள பாலசோர் என்னுமிடத்திலுள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்தில் (ITR) இருந்து சீக்கிங் 42B எனும் கடற்படை ஹெலிகாப்டர் மூலம் செலுத்திப்பரிசோதிக்கப்பட்டது.
இந்தியக் கடற்படைக்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, விமானம் மூலம் ஏவப் படக் கூடிய முதல் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை அமைப்பு இதுவாகும்.