TNPSC Thervupettagam

கம்காஸா ஒப்பந்தம்

September 10 , 2018 2173 days 623 0
  • இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளானது தொலைத் தொடர்புகள் இணக்கத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தத்தை (COMCASA - Communications Compatibility and Security Agreement) கையெழுத்திடுவதன் மூலம் இராணுவ மற்றும் பாதுகாப்பின் புதிய சகாப்தத்தை தொடங்கியுள்ளது.
  • இரு நாடுகளுக்கிடையேயான 2+2 அமைச்சரவை பேச்சுவார்த்தை மூலம் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.
  • இதன்மூலம் அமெரிக்க தொழில்நுட்பங்கள் மற்றும் மேம்பட்ட இராணுவ அமைப்புகளை இந்தியா பயன்படுத்த முடியும்.
  • மேலும் 2019-ல் இந்தியாவின் கிழக்கு கடற்கரையோரமாக முப்படைகளின் பயிற்சியை இந்தியா மற்றும் அமெரிக்கா நடத்தவிருக்கிறது.
  • இதற்குமுன் கடந்த ஆண்டு இந்தியா மற்றும் அமெரிக்காவானது பொதுப் பாதுகாப்பு இராணுவ தகவல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்