TNPSC Thervupettagam

கம்பளித் தோல் கொண்ட இராட்சத யானை

June 29 , 2022 753 days 381 0
  • தோல் மற்றும் முடியுடன் கூடிய தோல் கொண்ட இராட்சத யானையின் பதப்படுத்தப் பட்ட நிலையிலான உடல் கனடாவின் வடக்குப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.
  • இது பெண் யானை என்றும், சுமார் 30,000 ஆண்டுகளுக்கு முன்பு பனி யுகத்தின் போது இறந்திருக்கக் கூடும் என்றும் நம்பப்படுகிறது.
  • இந்தக் கண்டுபிடிப்பானது வடக்கு அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட, முதல் முழுமையான மற்றும் சிறந்த முறையில் பாதுகாக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட நிலையிலான கம்பளித் தோல் கொண்ட இராட்சத யானையைக் குறிக்கிறது.
  • கம்பளித் தோல் கொண்ட இந்தஇராட்சத யானையானது ஹோலோசீன் சகாப்தத்தில் முழுதாக அழியும் வரையில் ப்ளீஸ்டோசீன் காலத்தில் வாழ்ந்தது.
  • இந்தக் கண்டுபிடிப்புகள் 'அழகான மற்றும் உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகவும் நம்ப முடியாத பதப்படுத்தப்பட்ட நிலையிலான பனியுக விலங்குகளில் ஒன்று' என்று அழைக்கப்பட்டது.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்