மிக விரிவான ஆப்பிரிக்க வேளாண் மேம்பாட்டுத் திட்டம் குறித்த ஆப்பிரிக்க ஒன்றிய உச்சி மாநாடு (CAADP) ஆனது உகாண்டாவின் கம்பாலா என்னுமிடத்தில் நிறைவு அடைந்தது.
இந்த மாநாடானது 2026 முதல் 2035 ஆம் ஆண்டு வரையிலான ஆப்பிரிக்காவின் வேளாண்-உணவு அமைப்புகளுக்கான ஒரு மாறுதல் மிக்க கம்பாலா பிரகடனத்தை ஏற்றுக் கொண்டது.
இந்தப் புதிய பிரகடனம் ஆனது, இந்த ஆண்டில் அமலாக்கக் காலம் முடிவடைகின்ற மலாபோ பிரகடனத்தின் வழி உருவாக்கப்பட்ட ஒரு பிரகடனமாகும்.
இந்த உச்சி மாநாட்டின் போது, ஆப்பிரிக்கத் தலைவர்கள் புரட்சிகரமான பத்து ஆண்டு CAADP செயல் திட்டத்தையும் (2026–2035) அங்கீகரித்தனர்.
2003 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் மொசாம்பிக் நாட்டின் மபுடோ என்னுமிடத்தில் நடத்தப் பெற்ற ஆப்பிரிக்க ஒன்றியச் சட்டமன்றத்தின் இரண்டாவது அமர்வின் போது CAADP அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
இந்த அமர்வில், வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு குறித்த மபுடோ பிரகடனம் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
ஆப்பிரிக்க ஒன்றிய உறுப்பினர் நாடுகள் தங்கள் தேசிய நிதி ஒதுக்கீட்டில் குறைந்தது 10 சதவீதத்தை வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டிற்கு என்று ஒதுக்கீடு செய்வதற்கும், ஆண்டுதோறும் சுமார் 6 சதவீத வேளாண் உற்பத்தி வளர்ச்சியை அடைவதற்காக ஒதுக்கீடு செய்வதற்கும் இது வலியுறுத்துகிறது.