ஆந்திரப் பிரதேச மாநில அரசானது, சுமார் 10 மில்லியன் கம்பூசியா மீன்களை அந்த மாநிலத்திலுள்ள நீர்நிலைகளில் விடுவித்துள்ளது.
இந்த நடவடிக்கையானது கொசுக்களால் பரவும் மலேரியா மற்றும் டெங்கு போன்ற நோய்களை எதிர்த்துப் போராடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த மீன் வகையானது கொசு மீன் என்றும் அழைக்கப்படுகிறது.
இது பெரும்பாலும் கொசு லார்வாக்களைக் கட்டுப்படுத்தும் ஒரு உயிரியல் முகவராகப் பயன்படுத்தப் படுகிறது.
2022 ஆம் ஆண்டில் ஆந்திரப் பிரதேசத்தில் சுமார் 6,391 டெங்குப் பாதிப்புகள் மற்றும் 2,022 மலேரியா பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
கடந்த ஆறு மாதங்களில் அந்த மாநிலத்தில் 2,339 டெங்குப் பாதிப்புகள் மற்றும் 1,630 மலேரியா பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
இருப்பினும், இந்த வேற்றுப் பகுதியைச் சேர்ந்த பூர்வீகம் சாராத மீன் இனங்களை இந்த நீர்நிலைகளில் விடுவதால், இது பூர்வீக இனங்கள் எதிர் கொள்ளக் கூடிய தீங்குகள் பற்றிய அச்சத்தினை எழுப்பியுள்ளது.