கங்கோத்ரிப் பனிப் பாறைக்கு அருகில்கரிநுண்தூள் (Black carbon) செறிவானது கோடையில் காட்டுத் தீ மற்றும் விவசாயக் கழிவுகளை எரிக்கும் முறையான “பயிர்த்தாள் எரிப்பு” ஆகியவற்றின் காரணமாக 400 மடங்கு உயர்ந்துள்ளது.
வாடியா இமயமலை புவியியல் நிறுவனத்தைச் சேர்ந்த (WIHG - Wadia Institute of Himalayan Geology) விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பின்னர் இந்த முடிவானது வெளியிடப் பட்டுள்ளது.
உலகில் கறுப்பு கரிநுண்தூள்களை அதிக அளவில் வெளியிடும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது.
அடுத்து வரவிருக்கும் ஆண்டுகளில் இந்த உமிழ்வானது வியத்தகு அளவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது என்று ‘வளிமண்டல ஆராய்ச்சி’ இதழ் கூறுகின்றது.
இந்திய - கங்கைச் சமவெளியானது இதற்கு மிகப்பெரிய பங்களிப்பாக இருக்கும் என்றும் இது கூறுகின்றது.
கரிநுண்தூள்
கரிநுண்தூள் ஆனது புதைபடிவ எரிபொருள்கள் மற்றும் உயிர்வளங்கள் ஆகியவற்றின் முழுமையற்ற எரிப்பின் மூலம் ஏற்படுகின்றது.
CO2 வாயுவிற்குப் பிறகு காலநிலை மாற்றத்திற்கு இது இரண்டாவது பெரிய பங்களிப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.