சமீபத்திய எல் நினோ வறட்சியின் காரணமாக ஜிம்பாப்வேயில் உள்ள கரிபா ஏரியின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது.
ஏரியின் நீர் மட்டமானது அதன் கொள்ளளவில் வெறும் 13.52% ஆகக் குறைந்துள்ளது.
மழைக்கு ஏற்றவாறு அந்த ஏரியின் நீர்மட்டம் மாறுகிறது என்ற நிலையில் கடந்த ஆண்டு, ஏரி 21.94% நிரம்பியிருந்தது, ஆனால் 2015 ஆம் ஆண்டில் அந்த ஏரியின் நீர் மட்டம் 12% ஆகக் குறைந்திருந்தது.
280 கிலோமீட்டர் நீளமுள்ள, மனிதனால் உருவாக்கப்பட்ட கரிபா ஏரி என்பது கரிபா அணையின் ஒரு பகுதியாகும்.
கரிபா ஏரி என்பது உலகின் மிகப்பெரிய, மனிதனால் உருவாக்கப்பட்ட ஏரி மற்றும் நீர்த் தேக்கம் ஆகும்.
இது 1955 மற்றும் 1959 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் ஜாம்பியா மற்றும் ஜிம்பாப்வே இடையே ஜாம்பேசி நதிப் படுகையில் கட்டமைக்கப்பட்டது.