TNPSC Thervupettagam

கரியமிலப் பொருட்கள் நீக்க இலக்குகள்

January 21 , 2020 1643 days 551 0
  • 2008 ஆம் ஆண்டின் அளவை ஒப்பிடும்போது 2050 ஆம் ஆண்டில் கப்பல் துறையில் இருந்து வெளியேற்றப்படும் கரியமிலப் பொருட்களின் வெளியேற்றத்தை 50% ஆகக் குறைத்தல் என்னும் இலக்கை ஐக்கிய நாடுகள் சபை நிர்ணயித்திருந்தது.
  • இந்த இலக்கை அடைய, உலக நாடுகள் அனைத்தும் சேர்ந்து  1 டிரில்லியன் அமெரிக்க டாலர்களைச் செலவிட வேண்டியுள்ளது.
  • ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, கப்பல் துறையிலிருந்து ஏற்படும் உமிழ்வானது உலக அளவில் ஏற்படும் கரியமில வாயு உமிழ்வில் 2.2% ஆகும்.
  • கரியமிலப் பொருட்கள் நீக்க இலக்கானது சர்வதேசக் கடல்சார் அமைப்பால் தொடங்கப் பட்டது.
  • சர்வதேசக் கடல்சார் அமைப்பானது சர்வதேசக் கப்பல் போக்குவரத்து மற்றும் அதன் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை ஒழுங்குபடுத்துகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்