TNPSC Thervupettagam

கரீபியன் எரிமலையிலிருந்து சல்பர் டை ஆக்சைடு

April 24 , 2021 1186 days 548 0
  • கரீபியனில் எரிமலை வெடிப்பிலிருந்து (La Soufriere volcano eruption) சல்பர் டை ஆக்சைடு (SO2) என்ற உமிழ்வானது 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி அன்று இந்தியாவை அடைந்தது.
  • இது நாட்டின் வடக்குப் பகுதிகளில் மாசின் அளவை அதிகரித்து அமில மழையை ஏற்படுத்தும் என்ற அச்சத்தைத் தூண்டி உள்ளது.
  • இதை உலக வானிலை அமைப்பு உறுதிப்படுத்தி உள்ளது.
  • பூமியின் வளிமண்டலத்தின் இரண்டாவது அடுக்கான படையடுக்கு மண்டலத்தில் சல்பேட் தூசிப் படலத் துகள்கள் (sulphate aerosol particles) நுழைந்ததற்கான ஆதாரங்களையும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
  • ஏரோசோல்கள் சூரியனில் இருந்து வரும் கதிர்வீச்சைப் பிரதிபலித்து மீண்டும் அதை விண்ணிற்கு அனுப்பி, பூமியின் கீழடுக்கு மண்டலத்தைக் குளிர்விக்கின்றன.
  • புதைபடிவ எரிபொருட்களை மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பிற தொழில்துறை நிறுவனங்கள் எரிப்பதே வளிமண்டலத்தில் SO2 வெளிப்படுவதற்கு ஒரு மிகப்பெரிய ஆதாரமாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்