TNPSC Thervupettagam

கருங்கடல் பிராந்தியத்திற்கான தானிய முன்னெடுப்பு

November 8 , 2022 622 days 317 0
  • கருங்கடல் பிராந்தியத்திற்கான தானிய ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா சமீபத்தில் வெளியேறியது.
  • உக்ரைனில் நிலவும் மோதல்களால் ஏற்படும் உணவுப் பணவீக்கத்தைக் குறைக்கச் செய்வதற்காக இது தொடங்கப்பட்டது.
  • இது துருக்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றிற்கும் ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகியவற்றிற்கும் இடையேயான ஒப்பந்தமாகும்.
  • தற்போது ரஷ்யாவுடன் போரில் ஈடுபட்டுள்ள உக்ரைனில் இருந்து ஏற்றுமதி செய்யப் படும் உணவு தானியங்களைக்  கொண்டு செல்வதற்கான பாதுகாப்பானப் பாதையை உருவாக்க இது முயல்கிறது.
  • இந்த ஒப்பந்தத்தின் கீழ், உக்ரைனில் இருந்து மேற்கொள்ளப்படும் தானியங்கள், உணவு மற்றும் உரங்கள் ஆகியவற்றின் ஏற்றுமதியானது மூன்று முக்கிய உக்ரேனிய துறைமுகங்களில் இருந்து "பாதுகாப்பான கடல்சார் மனிதாபிமான திட்ட வழித்தடம்" வழியாக மீண்டும் தொடங்கப்பட அனுமதிக்கப்படும்.
  • கருங்கடல் பிராந்தியத்திற்கான தானிய ஒப்பந்தம் ஆனது 2022 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதியன்று காலாவதியாக உள்ளது.
  • அதனைப் புதுப்பிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முழுவதும் ஐக்கிய நாடுகள் சபையினால் மேற்கொள்ளப்பட்டது.
  • இருப்பினும், செவஸ்டோபோல் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த தனது கடற்படைக் கப்பல்கள் மீது ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக அக்டோபர் 29 ஆம் தேதியன்று ரஷ்யா இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்