TNPSC Thervupettagam

கருங்காய்ச்சல் ஒழிப்பு

April 12 , 2024 98 days 155 0
  • பொதுவாக கருங்காய்ச்சல் (காலா-அசார்) எனப்படும் உள்ளுறுப்பு லீஷ்மேனியாசிஸ்  பாதிப்பினை அகற்றுவதற்கான இலக்கை இந்தியா அடைந்துள்ளது.
  • தேசிய நோய்க்கடத்தி மூலம் பரவும் நோய்க் கட்டுப்பாட்டு மையம் (NCVBDC) ஆனது இந்தத் தரவுகளை வெளியிட்டுள்ளது.
  • NCVBDC மையத்தின் சமீபத்தியத் தரவு ஆனது, இந்தியா முழுவதும் 2023 ஆம் ஆண்டில் 520 கருங்காய்ச்சல் பாதிப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளன என்பதைக் குறிக்கிறது.
  • இந்திய நாடானது ஆரம்பத்தில் கருங்காய்ச்சல் பாதிப்பினை 2010 ஆம் ஆண்டிற்குள் ஒழிப்பதை இலக்காகக் கொண்டிருந்தது, ஆனால் தொடர்ச்சியான பல சவால்கள் காரணமாக இந்த இலக்கு ஆனது 2023 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டது.
  • உலக சுகாதார அமைப்பானது நோய் ஒழிப்பு என்பதனை, 10,000 பேருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பாதிப்புகள் ஏற்படவில்லை என்ற அளவிற்கு கட்டுக்குள் வைத்திருப்பது என வரையறுக்கிறது.
  • கருங்காய்ச்சல் என்பது மணல் ஈக்கள் கடிப்பதால் பரவும் புரோட்டோசோவா ஒட்டு உண்ணிகளால் ஏற்படும் நோய்க் கடத்தி மூலம் பரவும் நோய் ஆகும்.
  • இது குறிப்பாக பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம் மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் பல தசாப்தங்களாக குறிப்பிடத்தக்க ஒரு சுகாதாரச் சவாலாக இருந்து வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்