TNPSC Thervupettagam

கருங்காய்ச்சல் (VL) வழிகாட்டல் கட்டமைப்பு

June 16 , 2024 161 days 191 0
  • உலக சுகாதார அமைப்பானது (WHO) கிழக்கு ஆப்பிரிக்காவில் கருங்காய்ச்சல் நோயை ஒழிப்பதற்கான வழிகாட்டுதல்களை வழங்கும் புதிய கருங்காய்ச்சல் (உள்ளுறுப்பு லீஷ்மேனியாசிஸ்) கட்டமைப்பினை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் கிழக்கு ஆப்பிரிக்காவின் துணைப் பிராந்தியத்தில் VL பாதிப்பு எண்ணிக்கைகளை 90 சதவிகிதம் குறைத்து, ஆண்டிற்கு சுமார் 1,500க்கும் குறைவான எண்ணிக்கையாக குறைப்பது என்பது இதன் இலக்குகளில் அடங்கும்.
  • இந்தி மொழியில் காலா-அசார் என்று அழைக்கப்படுகிற இது பாதிக்கப்பட்ட பெண் மணல் ஈக்கள் கடிப்பதால் பரவுகிறது மற்றும் 80 நாடுகளில் இதன் தொற்று பரவுகிறது.
  • 2022 ஆம் ஆண்டில், உலகளாவிய VL பாதிப்புகளில் 73 சதவீதப் பாதிப்புகள் கிழக்கு ஆப்பிரிக்காவில் பதிவானது என்ற நிலையில் இதில் 50 சதவீதமானது 15 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளில் ஏற்பட்டது.
  • முன்னதாக, 2004 மற்றும் 2008 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் ஏற்பட்ட உலகளாவியப் பாதிப்புகளில் வங்காளதேசம், இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் 70 சதவீதப் பங்கினை கூட்டாகக் கொண்டிருந்தன.
  • 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், வங்காளதேசம் VL நோயினை வெற்றிகரமாக ஒழித்து விட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்ததையடுத்து அந்த நாடு இந்த சாதனையினை எட்டிய உலகின் முதல் நாடு என்ற பெருமையினை அடைந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்