இந்தியா மற்றும் இந்தோனேசியாவிற்கு இடையேயான இராணுவ கூட்டுப் பயிற்சியான கருட சக்தியின் 6வது பதிப்பை இந்திய இராணுவத்தின் சிறப்பு பணிப் பிரிவும் (Special task force) இந்தோனேசிய இராணுவமும் இணைந்து இந்தோனேசியாவின் பாண்டுங்கில் தொடங்கியுள்ளன.
கருடசக்தி என்பது இந்தியா மற்றும் இந்தோனேசியாவிற்கு இடையேயான இருதரப்பு ராணுவப் பயிற்சியாகும்.
இந்த கூட்டு இராணுவப் பயிற்சியானது பிப்ரவரி மாதத்தில் 19ஆம் தேதி முதல் மார்ச் மாதத்தின் 4ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் இரு நாட்டு இராணுவங்களும் தங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதும், கடல்சார் பாதுகாப்பில் இரு நாட்டு இராணுவங்களின் இணைந்து செயலாற்றும் தன்மையை அதிகரிப்பதும், இந்த கருடசக்தி போர்ப்பயிற்சியின் முக்கிய நோக்கங்களாகும்.
இருநாட்டு இராணுவங்களுக்கிடையேயான இராணுவ ரீதியிலான இராஜதந்திரத்தின் ஒரு பகுதியாக (Military Diplomacy) இந்தக் கூட்டுப் போர்ப்பயிற்சி நடத்தப்பட்டுள்ளது.