TNPSC Thervupettagam

கருணைக் கொலையைப் பற்றிய புதிய வரைவு வழிகாட்டுதல்கள்

October 31 , 2024 30 days 65 0
  • மத்திய சுகாதார அமைச்சகம் ஆனது, மறைமுகக் கருணைக் கொலை குறித்த புதிய வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
  • நோயாளி அல்லது அவர்களது உறவினர்களால் ஆவணப்படுத்தப்பட்ட தகவலறிந்த மறுப்பு உட்பட சில நிபந்தனைகளின் அடிப்படையில், தீவிர நோய்வாய்ப்பட்ட நோயாளிகளுக்கு உயிர் வாழ்வதற்கான மருத்துவச் சாதனங்களின் இணைப்பினைத் துண்டிப்பது குறித்து மருத்துவர்களை "கலந்தாலோசித்த ஒரு முடிவை" மேற்கொள்ள வேண்டும்.
  • மறைமுகக் கருணைக் கொலைக்கு "நோயாளியின் நலன்களுக்கு ஏதுவான முடிவை மேற்கொள்வதற்கு, தற்போது உயிர் வாழ்வதற்கு உதவும் மருத்துவ சாதன உதவிகளை நிறுத்த அல்லது கை விடுவதற்கு நான்கு நிபந்தனைகளை இந்த வழிகாட்டுதல்கள் வகுத்துள்ளன.
    • ஒரு நபர் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டால்,
    • மருத்துவ முன்கணிப்பு மற்றும் நோயாளியின் நோய் பாதிப்பு நிலை மோசமானது மற்றும் தீவிரமான சிகிச்சை முறைகளால் அது சிகிச்சையடைய வாய்ப்பில்லை என்று கருத்து முன்வைக்கப்பட்டால்,
    • மருத்துவ முன்கணிப்பு ஆலோசனையைத் தொடர்ந்து, ஒரு நோயாளிக்கான மருத்துவ ஆதரவைத் தொடர்வதற்கான ஒரு தகவலறிந்த மறுப்பை ஆவணப் படுத்தினால்,
    • உச்ச நீதிமன்றத்தால் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளுக்கு இணங்குதல்.
  • வரைவு வழிகாட்டுதல்களில் குணப்படுத்த முடியாத நோய் என்பது எதிர்காலத்தில் மரணம் தவிர்க்க முடியாதது என்ற மீளமுடியாத அல்லது குணப்படுத்த முடியாத நிலை என வரையறுக்கப்பட்டுள்ளது.
  • 72 மணி நேரம் அல்லது அதற்கும் மேலான கால கட்டத்திற்குப் பிறகும் குணமடையாத கடுமையான நீடித்த மூளைக் காயமும் சேர்க்கப்பட்டுள்ளது.
  • வாழ்வதற்கான திறன் இல்லாத ஒரு நோயாளிக்கு, மிகவும் குறைந்தபட்சம் மூன்று மருத்துவர்களைக் கொண்ட முதன்மை மருத்துவ (PMB) குழுவின் ஒருமித்த கருத்துடன், உயிர் வாழ்வதற்கான சாதன ஆதரவு நீக்க முன்மொழிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
  • அந்த மாவட்டத்தின் தலைமை மருத்துவ அதிகாரியால் நியமிக்கப்பட்ட ஒருவரைக் கொண்ட மூன்று மருத்துவர்களைக் கொண்ட ஒரு இரண்டாம் நிலை மருத்துவக் குழுவானது PMB குழுவின் முடிவைச் சரி பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்