TNPSC Thervupettagam

கருணைக் கொலை

March 15 , 2018 2320 days 713 0
  • குணப்படுத்த முடியாத நிலைக்கு சென்றுவிட்ட நோயாளிகளை அவர்கள் சம்மதத்துடன் கருணைக் கொலை செய்வதற்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
  • இந்திய உச்சநீதிமன்றம் கருணைக் கொலைக்கும், உயிர் சாசனம் (living wills) அல்லது முன் கூட்டிய மருத்துவ வழிமுறைகளை (Advance medical directives) வழங்கும் உரிமைக்கும் அனுமதி வழங்கியுள்ளது.
  • இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியலமைப்பு அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
  • கண்ணியமாக வாழ்வதற்கான உரிமை என்பது கண்ணியமாக இறப்பதையும் உள்ளடக்கியது என்ற கருத்தின் அடிப்படையில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு அமர்வு இந்த தீர்ப்பை அளித்துள்ளது.

  • மிகவும் மோசமாக நோய் பாதிப்புற்ற நிலையில் தாம் பெற்றுவரும் மருத்துவ சிகிச்சையை ஒருவர் மறுப்பதற்கான உரிமையை நடைமுறைப்படுத்த வகை செய்யும் உயிர் சாசனத்தை (living will) அங்கீகரிக்குமாறு கோரி “காமன் காஸ்” (Common Cause) எனும் அரசு சாரா தொண்டு நிறுவனத்தின் சார்பாக பிரசாந்த் பூஷன் 2005 ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கின் மீது உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
  • குணப்படுத்துவதற்கும் அல்லது உயிர் பிழைப்பதற்கும் எத்தகு நிச்சயமும் இல்லை எனும்போது துன்புறும் நோயாளிக்கு கண்ணியமான இறப்பை வழங்க அவருக்கு வழங்கப்பட்டு வரும் உயிர்காப்பு மருத்துவ ஆதரவை நிறுத்துவதும் அல்லது திரும்பப் பெறுவதும் கருணைக் கொலை அல்லது passive Euthanasia எனப்படும்.
  • குணப்படுத்த முடியாத நிலைமைக்குச் சென்றுவிட்ட நோயாளியை ஊசி மூலம் உயிரிழக்கச் செய்யும் நடைமுறை ஆக்டிவ் யுதனேசியா (Active euthanasia) எனப்படும். இந்த முறைக்கு அனுமதி இல்லை என உச்சநீதிமன்றம் ஏற்கனவே திட்ட வட்டமாகக் கூறியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்