வானியலாளர்கள் நமது பால்வெளி அண்டத்தின் மையத்தில் உள்ள மிகப்பெரிய கருந் துளையின் முதல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
உலகளாவிய ரேடியோ தொலைநோக்கிகள் வலையமைப்பின் ஆய்வுகளைப் பயன்படுத்தி, ஈவென்ட் ஹாரிஸான் தொலைநோக்கி (EHT) கூட்டமைப்பு எனப்படும் உலகளாவிய ஆராய்ச்சிக் குழுவால் இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டது.
இது Sgr A* அல்லது சாகிட்டரியஸ் A எனப்படும் நமது பால்வெளி அண்டத்தின் மையத்தில் உள்ள ஒரு மிகப்பெரிய கருந்துளையாகும்.
இந்த கருந்துளை இருப்பதற்கான முதல் நேரடிக்காட்சி சார்ந்த ஆதாரம் இதுவாகும்.