TNPSC Thervupettagam
April 13 , 2019 1926 days 949 0
  • முதன்முறையாக கருந்துளை படம் பிடிக்கப்பட்டுள்ளது. இது “போவேஹி” எனப் பெயரிடப்பட்டுள்ளது.
    • இந்தப் பெயரானது ஹவாய் சொல்லான “குமுலிப்போ” என்பவற்றிலிருந்து புகழ்பெற்ற ஹவாய் மொழிப் பேராசிரியரான லாரி கிமுரா என்பவரால் வழங்கப்பட்டது.
    • இது 54 மில்லியன் ஒளியாண்டுகளுக்கு அப்பால் உள்ள மிகப்பெரிய பால்வழி அண்டமான மெசியர் 87-ன் மையத்தில் அமைந்துள்ளது.
    • ஆராய்ச்சியாளர்கள் நிகல்வெல்லைத் தொலைநோக்கியைப் பயன்படுத்தி (Event Horizon Telescope) கருந்துளையின் புகைப்படத்தைப் பெற்றுள்ளனர்.

    நிகல்வெல்லை தொலைநோக்கி

    • நிகல்வெல்லைத் தொலைநோக்கி (EHT - Event Horizon Telescope) என்பது சர்வதேச கூட்டுமுயற்சியின் மூலம் பூமியில் அமைந்த 8 ரேடியோ தொலைநோக்கிகளின் ஒரு தொகுப்பாகும்.
    • EHT ஆனது உலகம் முழுவதும் உள்ள 8 தொலைநோக்கிகளை ஒன்றிணைத்து, இணைப்பு ஏற்படுத்தும் ஒரு முறையான மிகத் தொலைவு அடிப்படை எல்லை கொண்ட குறுக்கீட்டு ஒளி அளவியலைப் பயன்படுத்தியது.
    • இந்த ஒன்றிணைக்கப்பட்ட தொலைநோக்கிகள் இணைந்து முன்னிகழ்வற்ற உணர்திறன் மற்றும் தெளிவுத் திறனுடன் கூடிய பூமி போன்ற ஒரு மெய்நிகர் தொலைநோக்கியை உருவாக்கின.
    • EHT தொலைநோக்கிகளின் தொகுப்பு.
Atacama Large Millimeter Array James Clerk Maxwell Telescope
Atacama Pathfinder Experiment Large Millimeter Telescope
Heinrich Hertz Submillimetre Telescope South Pole Telescope
IRAM 30m telescope Sub-Millimeter Array
 
கருந்துளைகள்
  • கருந்துளை என்பது அதிக அளவிலான ஈர்ப்பு விசையைக் கொண்டுள்ள விண்வெளியின் ஒரு பகுதியாகும். இதிலிருந்து எந்தவொரு பொருளும் தப்பித்துச் செல்ல முடியாது.
  • ஒளி கூட கருந்துளைக்குள் சென்ற பின்பு தப்பித்துச் செல்ல முடியாது.
  • பல நட்சத்திரங்களின் வாழ்நாள் முடிவின்போது கருந்துளைகள் உருவாகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்