எண்டோமெட்ரியோசிஸ் நிலையினை மிகவும் நம்பகமான முறையில் கண்டறியச் செய்வதற்கான ஒரு இரத்தப் பரிசோதனை முறையினை டாட்லேப் என்ற அமெரிக்க நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
எண்டோமெட்ரியோசிஸ் (கருப்பை அகப்படலம்) என்பது உலகளவில் 10% அளவிலான பெண்களைப் பாதிக்கும் ஒரு உடல் பலவீன நிலையாகும்.
எண்டோமெட்ரியோசிஸ் என்பது ஒரு வலி மிகுந்த நாள்பட்ட நோயாகும் என்பதோடு, இதில் கருப்பையின் அகணி அல்லது எண்டோமெட்ரியம் போன்ற பல திசுக்கள் கருப்பைக்கு வெளியே வளரும்.
இதுவரையில், இதற்கான நோயறிதலுக்காக என்று மக்கள் சராசரியாக 6.7 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
எண்டோமெட்ரியோசிஸ் நிலைப் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை உலகளவில் 190 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் மட்டும் சுமார் 42 மில்லியன் பேர் எண்டோமெட்ரியோசிஸ் நிலையினால் பாதிக்கப் பட்டுள்ளனர்.