TNPSC Thervupettagam

கருவில் இருக்கும் குழந்தையின் உரிமைகள்

October 21 , 2023 274 days 301 0
  • உச்ச நீதிமன்றமானது சமீபத்தில், திருமணமான பெண்ணின் 26 வாரக் கர்ப்பத்தைக் கலைக்க அனுமதிக்க மறுத்ததன் மூலம் கருவில் இருக்கும் குழந்தையின் உரிமையை காத்துள்ளது.
  • 2021 ஆம் ஆண்டின் கருவின் மருத்துவம் சார்ந்த கலைப்பு (திருத்தம்) சட்டத்தின் கீழ், கருக்கலைப்பு செய்வதற்கான கால வரம்பான 24 வாரங்களை அந்தப் பெண் கடந்து விட்டார்.
  • மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு பெண்ணின் கர்ப்பமானது அவரது உயிருக்கும் ஆரோக்கியத்திற்கும் கணிசமான, உடல் ரீதியான மற்றும் உடனடி ஆபத்தை ஏற்படுத்தினால் மட்டுமே கருக்கலைப்பு செய்வதற்கு அனுமதி வழங்கப் படும் என்று இச்சட்டத்தின் 5வது பிரிவு கூறுகிறது.
  • இச்சட்டத்தின்படி, 20 வார காலக் கர்ப்பமானது ஒரு மருத்துவரின் ஆலோசனையின் பேரில் கர்ப்பத்தை கலைப்பதற்கான கால வரம்பாக உள்ளது.
  • ஒருவரின் 20 முதல் 24 வார கால அளவிலான கர்ப்பத்தினைக் கலைப்பதற்கான உரிமையானது, சில சூழ்நிலைகளின் கீழ் மட்டும் 2 பதிவு செய்யப்பட்ட மருத்துவ பயிற்சியாளர்களால் நிர்ணயிக்கப்படுகிறது.
  • 24 வாரங்களைக் கடந்த ஒரு கருவினை அதன் கருவின் முறையற்ற வளர்ச்சி காரணமாக கலைப்பது குறித்த ஒரு கருத்தினை வழங்குவதற்கு அங்கீகரிக்கப்பட்ட மையங்களில் ஒரு மருத்துவக் குழுவை உருவாக்குவது கட்டாயமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்