TNPSC Thervupettagam

கருவிழிப் படல உறுப்பு மாற்றம்

November 3 , 2024 26 days 104 0
  • சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம் ஆனது 1994 ஆம் ஆண்டு மனித உறுப்புகள் மற்றும் திசு மாற்று சட்டத்தினை (THOTA) திருத்தியமைக்க உள்ளது.
  • குடும்பத்தினரின் அனுமதியின்றி இந்தியாவின் மருத்துவமனைகளில் உயிரிழக்கும் அனைத்து இந்திய நோயாளிகளிடமிருந்தும் கருவிழிப் படலத்தினை எடுப்பதை இது எளிதாக்குகிறது.
  • இந்தப் புதிய முயற்சியின் மூலம், மருத்துவமனைகளில் உயிரிழக்கும் அனைத்து குடி மக்களிடமிருந்தும் தமது குடும்பத்தாரின் அனுமதியின்றி கருவிழிப் படலத்தினை மீட்டெடுக்க முடியும்.
  • அதாவது மருத்துவமனையில் உயிரிழக்கும் ஒவ்வொரு நபரும் கருவிழிப் படல தானம் செய்பவராகக் கருதப்படுவார்கள்.
  • எனினும், கருவிழிப் படலத்தினை தானம் செய்ய விரும்பாதவர்கள் உயிருடன் இருக்கும் போது தானம் செய்ய விருப்பமில்லை என்று பதிவு செய்திருக்க வேண்டும்.
  • தற்போது இந்தியாவில் நிகழும் உறுப்பு தானம் மூலமாக 50% தேவையை மட்டுமே பூர்த்தி செய்ய முடிகின்ற நிலை உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்