TNPSC Thervupettagam

கருவுற்ற மெகாமவுத் சுறா

March 16 , 2024 253 days 235 0
  • ஓர் அரிய மற்றும் பிடிபடாத ஆழ்கடல் வாழ் இனமான ஒரு கருவுற்ற மெகாமவுத் சுறாவானது பிலிப்பைன்ஸ் நாட்டின் கடற்கரையில் கரை ஒதுங்கியது கண்டுபிடிக்கப் பட்டது.
  • இது இதுவரை தென்பட்ட 60வது மெகாமவுத் சுறா இனம் ஆகும் என்பதோடு மேலும் கருவுற்ற ஒரு இனம் கண்டறியப்பட்டிருப்பது இது முதல் முறையாகும்.
  • இந்த மர்ம உயிரினங்கள் குட்டிகளை ஈனும் என்பதை இது முதன்முறையாக உறுதிப் படுத்துகிறது.
  • இந்த மெகாமவுத் சுறாக்கள், குறிப்பாக மெகாசாஸ்மா பெலாஜியோஸ் இனங்கள் ஆனது, உடலுக்குள்ளேயே முட்டைப் பொரித்துக் குஞ்சு பொரிக்கும் இனம் என்பதை இந்தப் புதிய கண்டுபிடிப்புகள் வெளிப்படுத்தியுள்ளன.
  • இதன் பொருள், தாயின் உடலின் உள்ளேயே பொரிக்கப்படும் முட்டைகளில் இருந்து அவற்றின் குட்டிகள் உருவாகின்றன.
  • மெகாமவுத் சுறாக்கள் என்பவை, பல ஆழ்கடல் வாழ் உயிரினங்களைப் போலவே, பெரும்பாலான நேரங்களில் 4,600 மீட்டர் (15,100 அடி) ஆழத்தில் வாழ்வதாக நம்பப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்