கேரள மாநில அறிவியல் ஆராய்ச்சியாளர்கள், ஈர நிலங்களின் வளத்தினுடைய மிக முக்கியக் குறிகாட்டிகளான கரையோரப் பறவைகளின் (உணவைத் தேடி நீரில் அலையும் நீண்ட கால்கள் கொண்ட பறவைகள்) எண்ணிக்கை 2010-2019 ஆம் ஆண்டு வரையிலான தசாப்தத்தில் குறைந்துள்ளதாகக் கண்டறிந்துள்ளனர்.
இந்த ஆராய்ச்சியாளர்கள் பொதுவாகக் காணப்படும் ஆறு கரையோரப் பறவை இனங்களைக் கண்காணித்தனர்.
இந்த ஆறு இனங்களும் பருவமழைக்குப் பிந்தைய காலங்களில் அதிக அளவிலும், மழைக் காலங்களில் மிகக் குறைந்த அளவிலும் பரவிக் காணப்படுகின்றன.