TNPSC Thervupettagam

கரோனாவை கண்டுபிடிப்பதற்கான தொழில்நுட்பம்

March 22 , 2020 1617 days 503 0
  • அணுவை அடிப்படையாகக் கொண்ட தொழில்நுட்பப் பயன்பாட்டின் மூலம் புதிய கரோனா வைரஸைக் கண்டறிவதற்கான சோதனைகளை மேற்கொள்ள வளரும் நாடுகளுக்கு உதவ சர்வதேச அணு ஆற்றல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
  • பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் வரும் சில வாரங்களில் வைரஸைக் கண்டறிவதற்கான தொழில்நுட்பம் குறித்த முதலாவது பயிற்சிக்குச் செல்ல இருக்கின்றனர்.
  • இந்த பங்கேற்பாளர்கள் நிகழ்நேர தலைகீழ் குறிமுறை பதிப்பு பல்டிம நொதி தொடர்வினை அல்லது RT – PCR (Real-Time Reverse Transcription Polymerase Chain Reaction) சோதனையைக் கையாளக் கற்றுக்கொள்ள இருக்கின்றனர்.
  • இந்த நோய் கண்டறிதல் முறையானது குறிப்பிட்ட மணி நேரத்திற்குள் கரோனா வைரஸை அடையாளம் கண்டு அதைக் கண்டறிவதற்காக அணுவை அடிப்படையாகக் கொண்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றது.
  • IAEA என்பது அணு சார்ந்த துறையில் ஒத்துழைப்பிற்கான ஒரு சர்வதேச மையமாகும்.
  • இந்த அமைப்பானது அணு கலந்த தொழில்நுட்பத்தின் பாதுகாப்பான மற்றும் அமைதியான பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக, தனது உறுப்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்றுகின்றது.
     

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்