சர்வதேச எல்லையான தேரா பாபா நானக் அருகே ஜீரோ பாயிண்டில் தொடங்கும் கர்தார்பூர் சாஹிப் பெருவழிப் பாதையைச் செயல்படுத்துவதற்காக இந்தியா சமீபத்தில் பாகிஸ்தானுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இது இப்போது இந்தியாவில் இருந்து கர்தார்பூர் செல்லும் சீக்கியர்களுக்கு விசா இல்லாத ஒரு பெருவழிப் பாதையாகக் கருதப் படுகிறது.
இந்தப் பெருவழிப் பாதையானது பஞ்சாப் – குர்தாஸ்பூரில் (இந்தியா) உள்ள தேரா பாபா நானக் கிராமத்திலிருந்து குருத்வாரா தர்பார் சாஹிப், கர்தார்பூர் (பாகிஸ்தான்) வரை மேம்படுத்தப்பட உள்ளது.
1539 ஆம் ஆண்டில் குருநானக் இறக்கும் வரை அவர் தங்கி இருந்த இறுதி இடமாக கர்தார்பூர் சாஹிப் கருதப் படுகிறது.