கர்தார்பூர் சாஹிப் வழித்தட ஒப்பந்தத்தின் செல்லுபடிக் காலத்தினை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அரசுமுறை வழிமுறைகள் மூலம் ஒப்புக்கொண்டுள்ளன.
இந்த ஒப்பந்தமானது 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதியன்று ஐந்தாண்டு காலத்திற்குச் செல்லுபடியாகும் வகையில் கையெழுத்தானது.
இது இந்தியாவிலிருந்து செல்லும் யாத்ரீகர்கள் கர்தார்பூர் சாஹிப் நடைபாதை வழியாக பாகிஸ்தானின் நரோவல் என்ற இடத்தில் உள்ள குருத்வாரா தர்பார் சாஹிப் கர்தார்பூருக்குப் பயணம் மேற்கொள்வதை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் செல்லுபடிக் காலத்தின் நீட்டிப்பு ஆனது, பாகிஸ்தானில் உள்ள புனித குருத்வாராவைப் பார்வையிடுவதற்காக என்று இந்தியாவிலிருந்துச் செல்லும் யாத்ரீகர்களின் பயன்பாட்டிற்காக இந்த வழித்தடமானது தடையின்றி செயல்பாட்டில் உள்ளதை உறுதி செய்யும்.