TNPSC Thervupettagam

கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு – தோல்வி

July 26 , 2019 1823 days 622 0
  • கர்நாடகாவின் விதான் சபாவில் (சட்டப் பேரவை) காங்கிரஸ் - ஜனதா தளம் ஆகிய கூட்டணிக் கட்சிகளால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு 6 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது.
  • 225 சட்டசபை உறுப்பினர்களைக் கொண்ட இச்சபையில் 20 சட்டமன்ற உறுப்பினர்கள் ஓட்டெடுப்பின் போது கலந்து கொள்ளவில்லை.
  • கலந்து கொள்ளாத சட்டமன்ற உறுப்பினர்கள் - 15 உறுப்பினர்கள் தங்களது உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளனர். 5 உறுப்பினர்கள் ஓட்டெடுப்பைத் தவிர்த்திருந்தனர்.
  • 99 சட்டமன்ற உறுப்பினர்கள் அரசிற்கு ஆதரவாக வாக்களித்த போதிலும், 105 சட்டமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கைத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தனர்.
  • S. நிஜலிங்கப்பா (1962-68), D. தேவராஜா உர்ஸ் (1972-77) மற்றும் சித்தராமையா (2013-18) ஆகியோர் மட்டுமே கர்நாடக வரலாற்றில்  தங்களது முழு பதவிக் காலத்தையும் நிறைவு செய்த முதல்வர்கள் ஆவர்.

குறிப்பு

  • நம்பிக்கை வாக்குத் தீர்மானம் கொண்டு வருவதன் மூலமோ அல்லது எதிர்க்கட்சி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து அரசின் நம்பிக்கையை நிரூபிக்குமாறு கோரினாலோ சட்ட சபையில் அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்