TNPSC Thervupettagam

கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல்

March 28 , 2018 2466 days 797 0
  • இந்தியத் தேர்தல் ஆணையம், 224 சட்டப் பேரவைத் தொகுதிகளைக் கொண்ட கர்நாடக மாநிலத்திற்கு ஒரே கட்டமாக மே 12 அன்று தேர்தலை அறிவித்துள்ளது. இதற்கான முடிவுகள் மே 15 அன்று வெளியிடப்படும்.
  • வேட்பாளர்கள், கட்சிகள் மற்றும் தற்போதைய அரசு ஆகிய அனைவரும் பிரச்சாரத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளான தேர்தல் நடத்தை விதிமுறைகள் (The Model Code of Conduct) கர்நாடகாவில் அமலுக்கு வந்துள்ளன.
  • இந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஆகிய இருவருக்கும் பொருந்தும்.
  • கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான அறிவிப்பு ஏப்ரல் 17 அன்று அரசிதழில் வெளியிடப்படும்.
  • வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஏப்ரல் 24 மற்றும் வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி ஏப்ரல் 27 ஆகும். அனைத்து தேர்தல் நடைமுறைகளும் மே 18 உடன் முடிவுக்கு வரும்.
  • தேர்தல் ஆணையம் கர்நாடகாவில் அனைவரும் வாக்களிப்பதற்கு ஏதுவான மையங்களை (Accessible Polls) அமைக்கக் கேட்டுக் கொண்டுள்ளது. தேர்தல் நடத்துவதற்காக அனைத்து வேட்பாளர்களின் புகைப்படங்களுடன் கூடிய VVPAT (Voter Verifiable Paper Audit Trail Systems) இயந்திரங்கள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கும் வழங்கப்படும்.
  • முதன்முறையாக, கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 56, 696 வாக்குச்சாவடிகளில் 450 வாக்குச்சாவடிகளை முழுவதும் பெண்களே நிர்வகிக்க உள்ளனர்.
  • திருத்தப்பட்ட அளவின்படி, சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஒரு வேட்பாளருக்கான அதிகபட்ச தேர்தல் செலவு ரூ.28 லட்சம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்