TNPSC Thervupettagam

கர்நாடக சமூகப் பாதுகாப்பு மற்றும் நல மசோதா

July 12 , 2024 6 days 122 0
  • கர்நாடகா அரசானது, இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் (சமூகப் பாதுகாப்பு மற்றும் நலன்) மசோதாவின் வரைவினை வெளியிட்டுள்ளது.
  • ராஜஸ்தான் மாநிலத்திற்கு அடுத்தபடியாக, இது போன்றதொரு நடவடிக்கையைத் தொடங்கிய இரண்டாவது இந்திய மாநிலமாக இது அமைந்தது.
  • அந்த மாநிலத்தில் இயங்குதள அடிப்படையிலான இணையம் மூலம் திரட்டப்படும் தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பு மற்றும் நலனை ஒழுங்குபடுத்த இந்த மசோதா முயல்கிறது.
  • இந்தப் புதிய வரைவு ஆனது, ஒரு நல வாரியம் மற்றும் இணையம் சார்ந்தத் தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பு மற்றும் நல நிதியை நிறுவ முயல்கிறது.
  • நிதி ஆயோக் அமைப்பின் 2022 ஆம் ஆண்டு அறிக்கையானது, 2029-30 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் 23.5 மில்லியன் கிக் தொழிலாளர்கள் இருப்பார்கள் என்று மதிப்பிடுகிறது.
  • பெங்களூரில் மட்டும் சுமார் 2 லட்சம் இணையம் மூலம் திரட்டப்படும் தொழிலாளர்கள் ஸ்விகி, சோமாட்டோ, ஊபர், ஓலா போன்ற பல தளங்களில் பணி புரிகின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்